பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் I69

மேலோட் டமாகப் பார்த்தால், இந்த நான்கு சொற்களும் ஒன்று போல் தான் தோன்றும். ஆழ்ந்து சிந்திக்கிற போதுதான், அதனுள் சூழ்ந்து கிடக்கின்ற சூத்திரங்களும் சூட்சமங்களும் புரியும்.

பிற ஆழி, அற ஆழி என்று பாடுகிறபோது, கடல்

என்றுதான் பொருள் கொண்டிருக்கின்றனர்.

அற என்ற அறச் சொல்லுக்கு ஆழி என்று கூறினார். பிறவி என்ற பிறப்புக்கு பெருங்கடல் என்று கூறினார்.

ஆழியை நீந்தல் அரிது என்று அங்கே பாடினார். பெருங் க. லை நீந்த முடியும் என்று இங்கே பாடுகிறார். ஏன் அப்படிச் சொன்னார்?

ஆழியை நீந்துதல் அரிது, என்பதற்குரிய சொல் விளக்கம் பாருங்கள்.

ஆழ் + இ என்பது தான் ஆழியாகி வந்திருக்கிறது.

ஆழ் என்றால் ஆழமான; இ என்றால் ஆச்சரியமான என்பது பொருளாகும்.

அதிகமாக ஆழமானதாகவும் , அதிசயம் மிக்க ஆச்சரியமானதாகவும், அச்சத்தை விளைவிக்கக் கூடியதுமான ஒரு நீர்ப்பரப்பைத்தான் ஆழி என்றார்.

ஆழியைத்தான் ஆழ் கடல் என்றனர்.

அதன் ஆழம் எவ்வளவுதான் என்று பார்த்தால், அந்த ஆழத்தின் ஆழத்தை அறியும் போதே,

ஆச்சரியமாக மட்டுமல்ல, அச்சமாகவும் இருக்கிறது.

சாதாரணமாக, ஆழியின் ஆழம் 2 முதல் 3