பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் I75

பிறந்துவிட்டதற்காக வாழ் கிறவர்களே அதிகம். அதிலும் வாழ்க்கையை ஒட்டுகிறவர்களே இன்னும் அதிகம்.

இந்த ஒரு பிறவிக்கு யாரும் உகந்தவர்களாக இருக்க மாட்டார்களா என்ற ஏக்கத்திலே எழுதப்பட்ட இலக்கியம் தான் திருக்குறள்.

பிறவிப் பெருங்கடலை எளிதாக, இனிதாக நீந்தக் கூடிய வல்லமை, இறைவன் அடி சேர்ந்தவர்க்கே உண்டு. -

இறைவன் அடி சேர்ந்து விட் டார் என்றால் , நம்மவர் மரபுப் படி, அவர் இறந்து விட்டார் என்பது தான் பொருள்.

இறந்து போனவர் எப்படி நீந்த முடியும் என்று கேட்டால், நாதடித்த நாத்திகர் கூட்டம் என்று, ஒரு பட்டம் கட்டி விடுவார்கள்.

இதற்காக, ஏன் வம்பு என்று பயந்து கொண்டே, பதுங்கி ஒதுங்கிப் போவாரும் உண்டு.

இங்கே நாம் வாதாடவோ, மற்றவர்கள் கூறியதை எதிராடவோ இங்கு வரவில்லை.

குறளின் சொல்லுக்குள்ளே, உள் மறையாக மறைந்து கொண்டிருக்கும் ஒரு சில உண்மைகளை, வெளிப்படுத்த முனைந் திருக்கிறோம். அவ்வளவு தான்.

இறைவன் என்றவுடன், பக்தி உள்ளவர்கள் கடவுள் என்று பொருள் கூறி விட்டார்கள்.

இறைவன் என்றதும் , மக்களிடம் இறை