பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

I76

வசூலிக்கிற தலைவனே, இறைவன் ஆகி விட்டான். இந்த அரசனாகிய இறைவன் வாழுகிற இடமே கோயில் என்று இருந்தது.

கோ+இல், அரசன் வாழ் கிற இடமே கோயில். அதுவே பின்னாளில் , ஆண்டவன் இருக்கும் இடமாகப் பெயர் பெற்றது என்றும் பொருள் கூறுகிறார்கள்.

நாம் இன்னும் கொஞ்சம் நுண்மையாக உள் புகுந்து பார்க் கலாமே என்று இங்கு முயற்சித்திருக்கிறோம்.

இறு +ஐ வன் என்று நாம் இந்த இறைவனை பிரித்துப் பார்க்கிறோம்.

இறு என்பதற்கு, கெடு, அழி, வீழ்த்து, முடி, வினாவு, விடையளி என்று பல பொருள்கள் உண்டு.

ஐ என்றால் அரசன், ஆசான், குரு, தலைவன், கடவுள் என்று பல பொருள்கள் உண்டு.

வன் என்றால் , கடுமை, வலிமை என்ற அர்த்தங்கள் உண்டு.

இப் பொழுது நாம் , பொருள்களை திரட் டி சேர்த்துப் பார்ப்போம்.

1. ஐம் பொறிகளை அடக்காமல், மனம் போல வாழ்கின்ற மக்களை ஐம் பொறி அடக்கான் என்று அந்நாளில் கூறினர்.

இதற்கு, இல்வாழ்வில் ஈடுபட்டிருப்பவன் என்று ஒரு அர்த்தம். இல் வாழ் வில் நல் வாழ்வு வாழ்பவரையே இல்லறத்தார் என்று போற்றினர்.