பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் I9

பயில் கிறார்களோ, அவர்களுக்கு அதாகவே அறிவுறுத்த, ஆவேசப் பட்ட ஆசைகளைத் தணிக்க, அருமையான கருத்துக்களைப் புதுப்பித்துக் கொள்ள, குறள்கள் இருக்கின்றன. உதவுகின்ற அளவில் உய்யும் வழிகளைக் காட்டு கின்றன. - - - - -

‘உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டு’

என்று செயலூர்க் கொடு ஞ் செங்கண்ணனார் இப்படிப்பாடுகிறார்.

‘'வேதப் பொருளை விரகால் விரித்து உலகோர் ஒதத் தமிழில் உரை செய்தார். ஆதலால்

‘உள்ளுவர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப

வள்ளுவர் வாய் மொழி மாட்டு’

(திருவள்ளுவ மாலை பாடல் 42)

விரகு என்ற வார்த்தைக்கு தந்திரம், சாமார்த்தியம், புத்தி என்று அர்த்தங்கள் உண்டு.

மறைந்து கிடக் கும் வேதத்தின் தத்துவப் பொருட்களை எல்லாம், உலக மக்கள் கற்றுத் தெளிய, தமிழ் மொழியில் சாமார்த் தியமாக, புத் திக் கூர்மையுடன் என்று நாம் அறிகிறபோது, வள்ளுவர் திருவள்ளுவர் ஆகிறார். திருத்தகு தெய்வத் திருவள்ளுவர் என்று அவரைப் பற்றி அசரீ பாடுகின்றது என்று போற்றுவோரும் உண்டு.

தேவில் சிறந்த திருவள்ளுவர் குறள் வெண்பா என்று உறையூர் முது கூற்றனார் பாடுகின்றார். தேவில் என்றால் தேவாலயம் என்பது பொருள்.

பொய் யாமொழியார் என்று போற்றப் பட்டு,