பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

முடிந்ததால் வஞ்சகமும் ; பேசத் தெரிந்ததால் குழப்பமும் விளைவிக்கும் கொடுர குணமும் கொண்டவர்களாக, மனிதர்கள் மாறி விடுவார்கள் என்பதால் தான், இவர்களுக்குப் பெயர் வைக் கிற

போதே, மனிதர்கள் என்று நமது முன்னோர்கள் பெயர் வைத்தனர் போலும்.

உலகம் என்பதற்கே மக்கள் தொகை என்று அர்த்தம். மக்கள் எல்லாம் மனித இனம் தானே. அந்த மனிதன் என்ற வார்த்தைக் குள், எத்தனை ஆழமான அழுத்தமான பொருட்களைப் புகுத் தி வைத் திருக் கிறார்கள் பாருங்கள்.

மனிதன் என்ற சொல் லைப் பிரித்துப் பார்ப்போம்.

மன் :மதன் நிதன் தமன் தனிமன் தனி தன்

என்று நாம் பிரிக்கும் ஏழு சொற்களிலும், எவ்வளவு கம்பீரமான கருத்துக்கள் கலந்துறைந்து கிடக்கின்றன பாருங்கள். -

மன் என்றால் நிலைத்திருக்கிற என்று பொருள்.

மன் என்றால் நினைப்பவன் என்றும் அர்த்தம்.

மதன் என்றால், அழகானவன், மன்மதன் என்று அர்த்தம்.

நிதன் என்றால் , எப்பொழுதும், நிதமும் , அப்படியே இறுதி வரை வாழ்ந்து வருகிறவன் என்று அர்த்தம்.

தமன் என்றால் , நம் மவன், உற் றான் என்று அர்த்தம்.