பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

40 கொண்ட பின் தொடர்வோர் யாவரும் ஞான விளக்காகிறார்கள்.

இந்த ஞான மார்க்கம் என்பது திக்குத் தெரியாத காடு போல. அதில் நுழைந்து விட்டால், திசையும் தெரியாது, வசையும் புரியாது. அதில் தேடித் தேடி இளைத்தும், வாடி வாடிக்களைத்தும் வாழ் விழந்து போக வேண்டுமே தவிர, விரும்பிய திசையையும் வேண்டிய இசையையும் பெற முடியாது.

ஆக, அந்த அடர்ந்த ஆழிருள் காட்டில் , வழி நடத்திச் செல் பவராக, மெய் யான வழி செல்ல முயலுகிறபோது ஏற்படுகிற ஐயங்களை எல்லாம் போக்குகிறவராக குரு வாழ்கிறார்.

ஆகவே, குருதான் குல தெய்வம் என்று கூறுகிற கூற்று முக்காலும் மெய்ம்மையாகவே விளங்குகின்ற தன்றோ!

அத்தகைய குருவைத்தான் வள்ளுவர் வாழ்த்திப் பாடுகிறார் .

குரு வணக்கம் என்று கூறாமல் கடவுள் வாழ்த்து என்று பெயர் வைத்தமைக் குக் காரணம், குருமார் களின் மேல் கொண்டிருந்த வைத்திருந்த நம்பிக்கை தான். மரியாதை தான்.

குரு என்றால் மதவாதிகளாக விளங்குபவர்கள் அலல. மகாஞானம் பெற்ற தேவர்கள்.

கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் வருகிற பத்துப் பாடல்களும், குருவைச் சரணடையுங்கள். குருவின் திருவடியைப் பின்பற்றுங்கள். குருவின் வழியைப் பின்பற்றுங்கள். குருவின் நல்போதனைக்கு