பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

வாய்மை என்பது தீமை உண்டாக்காத சொல்லைப் பேசுவதாகும். தவத் தோடு தானம் செய்வதை விட, பொய் பேசாமல் வாழ்வது பெரிய செயலாகும். பொய்மை இல்லாது வாழ்ந்தால், அது அற வழிகள் எல்லாவற்றையுமே, ஆற்றுகின்ற ஆற்றல்ைப் பெற்றுத் தரும் என்கிறார் வள்ளுவர்.

அப் படிப் பட்ட அறவாளர், அகிலத் தாரின் அகங்களுக்குள்ளே நின்று வாழும் நீடு பேறுடையவராக விளங்குகிறார்.

அப்படிப் பொய்மையல்லாத வாழ்வு வாழத்தக்க, பேராற் றலைப் போதித்து, வாழ் வாங்கு வாழச் செய்யும் வல்லமைதான் குருவினிடம் குடி கொண்டிருக்கிறது.

குருதான் திருவாகத் திகழ்கிறார். அவர் காட் டு கிற மார்க்கம் தான், ஒளிமயமான அருள் மார்க்கம். இதைப் பட்டினத்தார், மனம் நெகிழ்ந்து பாடியிருப்பதைக் கேளுங்கள்.

‘குருமார்க்கம் இல்லாத குருடருன் கூடிக்

கருமார்க்கத் துள்ளே கருத்தழிந்து கெட்டேனே’

ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப் பாசாங்கு பேசி மதியிழந்து கெட்டேனே’

குரு வானவரின் வழிகாட் டல் இல் லாமல் வாழ்பவர்களை குருடர் என்று அழைப்பதும்; ஆசாரம் இல்லாதவர்களை (ஒழுக்கம் இல்லாத) அசடர் என்று பாடுவதிலிருந்தும், குருவின் உறவு எத்தகைய அருள் மிகுந்த, ஒளிமயமான வாழ் வை அளிக்கிறது என்பதைப் பார்த்தீர்களா!