பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


முஸ்லிம் கலவரத்தை அடக்கச் சென்றபொழுது, அவர் தங்கியிருந்த ஹைதரி மாளிகையின் மீது சில குண்டர்கள் கல்லை வீசினர். அடிகள் வெளியே வந்தார்; நேராகக் குண்டர்கள் நின்று கொண் டிருந்த இடத்திற்கு விரைந்தார்; 'என்னைக் கொன்று விடுங்கள்! என்னைக் கொன்று விடுங்கள்!' என்று கூச்சலிட்டார். பிறகு அக்குண்டர்கள் தம் அறியாமைக்கும் தவறுக்கும் வெட்கிக் கலைந்து சென்றனர்.

ஒருமுறை தோட்டத் தொழிலாளிகளின் உரிமையைக் காப்பதற்காகச் 'சம்பான்' என்ற இடத்தில் காந்தியடிகள் ஒரு போராட்டம் நடத்துவதற்கு வேண்டிய ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். அத்தோட்ட முதலாளிகளில் பெரும்பாலோர் வெள்ளையர்கள். ஒரு வெள்ளை முதலாளி காந்தியடிகளைக் கொல்வதற்காகத் துப்பாக்கி வாங்கியிருந்தார். இதைக் கேள்விப்பட்ட காந்தியடிகள், ஒரு நாள் அத்தோட்ட முதலாளியின் மாளிகைக்குத் தனியாகச் சென்றார். 'நண்பரே! என்னைக் கொல்வதற்காகத் தாங்கள் துப்பாக்கி வாங்கி வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். தாங்கள் என்னைக் கொல்ல விரும்பினால், இப்போது கொன்று விடுங்கள். அதற்காகவே நான் தனிமையில் வந்திருக்கிறேன்' என்று அடிகள் பணிவுடன் கூறினார். அவ்வெள்ளையர் வாயடைத்து நின்றார்.

நவகாளியில் இந்து முஸ்லிம் கலகம் மிகுந்திருத்தது. எங்குப் பார்த்தாலும் கொலை! கொள்ளை! வீடுகளெல்லாம் தீக்கு இரையாக்கப் பட்டன.