பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அருளினானில்லை. அது குறித்து யான் உறும் வருத்தத்துக்கோர் அளவில்லை. அவரவர், அவரவர்க்குரிய தாய்மொழி வாயிலாகவே கல்வி பெறவேண்டும். தமிழ் மக்கள், தம் மொழியை ஆங்கிலம் முதலிய மொழிகளைவிட முதன்மையாகக் கருதல் வேண்டும். தமிழ் நாட்டில் ஓரிடத்தில் எனக்கு ஆங்கிலத்தில் வரவேற்பறிக்கை வழங்கப்பட்டது. உடனே யான் அதை மறுத்துரைத்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வறிக்கை தமிழில் எனக்கு அளிக்கப்பட்டிருந்திருப்பின் நான் பெரிதும் மகிழ்ந்திருப்பேன்.’

‘தமிழ்மக்கள் எனது குருதிக் கலப்புற்ற உடன் பிறந்தவர் போலத் தோன்றுகிறார்கள்.’

அடிகளின் மேற்கூறிய உரைகள் நமக்கு எதைக் காட்டுகின்றன? தமிழின்பாலும், தமிழ் மக்கள்பாலும் அடிகள் கொண்டிருந்த பெரு விருப்பையும், பேரன்பையும் காட்டுகின்றன. குறிப்பாகத் திருக்குறள் பால் அவர் உள்ளம் ஈர்க்கப்பட்டதை நாம் உணர்கிறோம். மேலும் அடிகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை அடிக்கடி எடுத்துப் படிப்பதுண்டு என்ற செய்தியை, அவர் வாழ்க்கை வரலாற்றில் காணலாம். வள்ளுவர் வற்புறுத்தும் சிறந்த அறங்களான அருளுடைமை, அழுக்காறாமை,