பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சொற்பொழிவினிடையே, ‘இச் சுதேச மன்னர்கள் ஏன் வெள்ளையரின் வேலைக்கார (Butler)ரைப் போல் விநோத உடையணிய வேண்டும் ? அவர்கள் தோற்றம், கூர்ச்சர நாட்டு வயல் வெளிகளில் திரியும் குரங்குகளைப் போல் இருக்கிறது’ என்று கூறி விட்டார். அன்னிபெசண்ட் அம்மையாருக்கு அடங்காத கோபம். மன்னர்களின் கோபத்திற்குக் கேட்க வேண்டுமா? உடனே அரசர் கூட்டம் ஆத்திரத்தோடு வெளியேறியது. பண்டித மாளவியாவோ, ‘அரசர் பெருமக்களே! அரசர் பெருமக்களே!’ (Your Highnesses) என்று அலறியடித்துக் கொண்டு அரசர்களின் பின்னால் ஓடினார். ஆனால் அவர் அலறல், அரசர் பெரு மக்களின் செவிகளுக்கு எட்டவில்லை.

வாய்மையில் உறுதிகொண்ட காந்தியடிகள் வழக்கறிஞராக எவ்வாறு பணிபுரிந்தார் என்று பலருக்குப் புரியாத புதிராக இருக்கும். ஏனென்றால், பொய் பேசத்தெரியாதவன் வழக்கறிஞனாக இருக்க முடியாது. குற்றமற்றவனைக் கூடக் கூண்டிலேற்றிக் கொலைத் தண்டனை வாங்கிக் கொடுக்க அவர்கள் அஞ்சுதல் கூடாது. பொய்யை அழகாகவும், திறமையோடும் பேசுபவன் சிறந்த வழக்கறிஞனாச் சமுதாயத்தால் கருதப்படுவான். அத்தொழிலிலும் காந்தியடிகள் வாய்மையைக் காப்பாற்றினார். தம்மிடம் வரும் வழக்கில் நேர்மையிருந்தாலன்றி, அடிகள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். தென்னாப்பிரிக்காவில் திருவாளர் ரஸ்டம்ஜி என்ற ஒரு பாரசீக நண்பர் இருந்தார். அவர், அடிகளின்