பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்ற குறளுக்கு விளக்கமாக அமைந்திருக்கின்றன. ஆங்கிலப் பேரறிஞரான இரஸ்கின் எழுதியுள்ள கடைசி மனிதனின் நல்வாழ்வு’ என்ற நூல், காந்தியடிகளின் வாழ்க்கையில் ஒரு திருப்புமையமாக அமைந்தது என்று முதலில் குறிப்பிட்டேனல்லவா? அந்நூலில் வலியுறுத்தப்பட்ட கொள்கைகளில் முதன்மையானது, ‘வழக்கறிஞன் உழைப்பும், நாவிதனுடைய உழைப்பும் ஒரே பெறுமான முள்ளவை’ என்பதுதான். அக்கொள்கை அடிகளின் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டது எனலாம். உலகில் பெரும்பாலோர் பேச்சளவில் சீர்திருத்த வாதிகளாக இருப்பர். சீர்திருத்தக் கொள்கைகளை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிப்போரை விரல்விட்டு எண்ணிவிடலாம். அடிகள் மேற் கொண்ட சீர்திருத்தம் நடைமுறைச் சீர்திருத்தம். எப்பொழுதும் ஒரியக்கத்தின் தலைவன், தான் வகுத்த கொள்கைகளுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் ; தன்னல மறுப்புள்ளவனாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவனைப் பின்பற்றுபவர்களும் கொள்கையில் உறுதியும், நம்பிக்கையும் கொண்டவர்களாக விளங்குவார்கள்.

‘வழக்கறிஞன் தொழிலும் நாவிதன் தொழிலும் ஒரே பெறுமானமுள்ளவை’ என்று காந்தியடிகள் வாயளவில் சொன்னதோடு அமையவில்லை. தாமே நாவிதன் செய்யும் தொழிலைச் செய்து காட்டினார். தென்னுப்பிரிக்காவில் அடிகள் வாழ்ந்தபோது, ஒரு நாள் முடிவெட்டிக் கொள்வதற்காகச் சென்றார். முடிவெட்டும் நிலையத்தில் பணி செய்துகொண்