பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலைப் பொழுது. இனிய தென்றல். வீட்டுத் தோட்டம். பெரிய தோட்டம். பல மரங்கள் கிளைத்துப் படர்ந்துள்ளன. அவற்றின் கிழல் பரவலாக வீழ்ந்து கோலமிட்டுள்ளது. அதோ ஒர் மூலை; நிழலில் எழிலி. அச்சிறுபெண், ஏதோ செய்துகொண்டிருக்கிருள். ஒடி ஆடும் பருவம். ஆலுைம் மூலையில் உட்கார்ந்து இருக்கிருள். எதையோ செய்து கொண்ருடிக்கிருள். அவளது உடன் பிறந்த அண்ணன் கண்ணன் வருவதையும் கவனியாது ஈடுபட்டுள்ள வேலே என்ன? ஆம். தெரிகிறது. மணல் வீடு. வீடு கட்டுவதிலே முனைந்துள்ளாள் எழிலி. நல்ல முயற்சியே ஆக்க முயற்சியே. குற்றமற்ற விளையாட்டே. யாருக்கும் இதல்ை தொல்லையில்லை. அவள் பாட்டுக்கு வீடு