பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கட்டட்டும் என்று விட்டுவிடுவதால் யாருக்கும் கெடுதல் இல்லை. ஆயினும் ஏன் கண்ணன் காலால் உதைக்கிருன்? அவனேடு போட்டியிடவில்லையே எழிலி. அவன் சில ஆண்டுகளுக்கு முன் ஆடித் தீர்த்த விளையாட்டுதனே அது. காக்கவேண்டிய அண்ணன், உதைத்து அழிப் பானேன்? குழங்தைப் பருவக் குறும்பா? மணல்வீடு, மண்மேடாகி விட்டது. எழிலி எதிர்த்துப் போராடவில்லை; அழுது கொண்டே எழுங்தாள் ; அழுது கொண்டே தோட்டத்தின் மற்ருெரு மூலைக்குச் சென்று விட்டாள். கண்ணனின் வெகுளி தணியவில்லே. வெகுளி தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும். மண்மேட் டைத் திமுதிமுவென மிதித்தான். 'இதோ விட்டேன. பார்’ என்று கத்தினன். 'அங்கேயும் வீடு கட்டு. கட்டியானதும் வங்து, தரை மாட்டமாக்குகிறேன்.” நேற்று அம்மா இருந்தா, செல்லங் கொடுக்க. கோயிலில் இருந்து வரும்போது, உன்னே மட்டும் தூக்கிக்கொண்டா. என்னை, கடக்கவிட்டா. அப்ப, உனக்குக் காலம். இப்ப, எனக்குக் காலம். அம்மா, வீடு திரும்புவதற்குள், நீ எத்தனே வீடு வேண்டு. மாலுைம் கட்டு. நான் அத்தனேயையும் அழித்து விடுகிறேன். அதற்காகவே, அங்கே இங்கே போகாமல் தோட்டத்திலேயே காத்திருக்கப் போகிறேன். பார்த்துக்கொள்!' - இப்படி உறுமினன் அண்ணன் கண்ணன்.