பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 கண்ணன் யாரைப் பார்த்து உறுமினன்? தனது பாதுகாப்பிற்கு உரிய தங்கையைப் பார்த்து உறுமினன். மாலே முழுவதும் வீணுக்கி விட்டான். விளையாடவில்லை. செய்து பார்த்தும் மகிழவில்லே. பொறுமி பொறுமி வீனன்ை. வெறும் மிரட்டலா? இல்லை. மீண்டும், வேருேர் மூலையில் எழிலி கடடிய மணல் வீட்டையும் காலால் இடரி அழித்துவிட்டான். யானைப் புத்தி ஆணுக்கு ஆகுமா? வளர்ந்து வாழ வேண்டிய ஆணுக்கு ஆகுமா? அழிவிலே கருத்து, கண்ணனுக்கு. அவனுக்கு ஆக்கத் தெரியாதா? தெரியும்; முடியும். ஆயினும் அடுத்தடுத்து அழித்து மகிழ்கின்ருன். அறைகூவல் விடும் ஆளோடு போராடி அழிக்கவில்லை. தன் அரவணைப்பிற்குரிய குழங்தையை அழவைத்து மகிழ் கிருன். குழங்தை எழிலி புரிந்த குற்றமென்ன? ஒன்று மில்லை. நேற்று, எழிலி கேட்டல்ல அம்மா தூக்கிக் கொண்டது. தெருவிலே ஒடும் வண்டிகளில் சிக்கி விடுமோ குழந்தை என்று அஞ்சி அவள் தாக்கி வந்தாள். அதைப் பொருத கண்ணன் காலத்திற்காகக் காத்திருந்தான். இப்போது காலம் வங்தது. ஆத்திரத்தைத் தீர்த்துகொள்ளுகிருன். அழுக்காறு அவனே ஆட்டிப்படைக்கிறது. அதற்கு அடிமையாகி விட்டான். ஒரு வேளை வாழ்வுபோய் விட்டது.