பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 -- அவன் மேல் நமக்கு ஆத்திரம் எழுகிறது. வண்கண்மை ஆகாது என்று அறிவுரை கூறத் துடிக் கிருேம். அழுக்காறு அழித்துவிடும் என்று உரைக்கப் பதைக்கிருேம். பொறு மனமே பொறு. உலகம் அறியாத கண்ணன் மட்டுமா, அழிவுப் பணியிலே காலத்தைப் பாழாக்குகிருன். இல்லே. இல்லை. அழுக்காறு அங்கிங்கெளுதபடி எங்கும் நீக்கமற. கிலவுகிறது. அழுக்காற்ருல் அடுத்தவனே க் கெடுக்க முயன்று, தன் வளர்ச்சியைக் கெடுத்துக் கொள்ளும் துடிப்பு முதியவர்களையும் விட்டபாடில்லேயே. வீட்டுக்கு வீடு வளர்ந்த குழங்தைகளைக் காண்ப தில்லையா? எழிலி மேல் எழுங்த எரிச்சலே, ஒருநாள் முழுவதும் முடிந்து வைத்துக் கொண்டிருந்தான், கண்ணன். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் முளைத்த எரிச்சலே, பல்லாண்டுகளுக்கும் காத்து வைத்துக் கொண்டு, விளுகிப் போவாரை வீடுதோறும் காண்கிருேமே சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். கோபம் கொண்ட வனே மட்டுமா அழிக்கிறது. இல்லை. உறவையும் சுட்டுப் பொசுக்கி விடுகிறது. எனவே கோபத்தைவிடப் பயிற்சி பெறவேண்டும். அதற்குக் கடும் பயிற்சி தேவை. அழுக்காறே, சினத் தீக்கு எரிபொருள். அதைச் சுரக்கவிடக் கூடாது. அதுவே, மனிதனுக்குப் பல கேடுகளையும் கொண்டுவந்து குவிக்கும். ஆகவே,