பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 ஒழுக்காருக் கொள்க ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்கா றிலாத இயல்பு. என்று வழிகாட்டுகிறது. வள்ளுவம். பொருமைப் படாமை இயல்பாகிவிட வேண்டும். அதற்கும் முயற்சி: இடையருத முயற்சி தேவை. வாழப் பிறந்த மனிதன், வளரப் பிறந்த மனிதன், தனக்குத் தானே போட்டியிட்டுக் கொண்டு, நேற்றிலும் இன்று அறிவிலே வளர வேண்டும். இன்றைக்கிருப்பதைவிட அதிக ஆற்றலே நாளேக்குக் காட்டவேண்டும். முன்னர் எழுதிப் படைத்ததிலும் சிறப்பாக நாளை எழுதிப் புகழ்பெறவேண்டும். சென்ற காலச் சாதனைகளையும் மீறும் எதிர்காலச் சாதனைகளில் சிங்தையைச் செலுத்த வேண்டும்: ஈடுபட வேண்டும்; பாடுபட வேண்டும். அப்போது, இப்போதிலும் எப்போதும் வளர்ந்து கொண்டே இருப்பான். அத்தகைய மனிதனின் கணக்கு-அறிவுக் கணக்கும் - ஆற்றல் கணக்கும் - சாதனேக் கணக்கும்அன்பர்கள் கணக்கும் - வளர்ந்துகொண்டே இருக்கும். தன் கணக்கு வளர்வதே சிறப்பு. தன் கணக்கு வளராமல் பிறர்பிறர் கணக்கு சிறுப்பதின் மூலம் தனக்குப் பெருமை வரும் என்பது ஏமாற்றம். அக் கானல் நீரைத் தேடி, பொன்னிலும் மணியிலும் விலையுயர்ந்த தனது காலத்தை, பிறரை மடக்கு வதற்கும், பிறரை அடக்குவதற்கும் செலவிடுவது அவலம். இதை உணர்ந்தோமா? நம் நேரத்தில், சிந்தனையில், சொல்லில், செயலில் எத்தனை பங்கை, எங்தெந்தப் பொய் மானேயோ