பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பிடிப்பதில் வீனக்குகிருேம். குழந்தைப் பருவம் முதல் கிழப்பருவம் வரை, எண்ணற்றவர்கள் பேரில் எழுந்த எரிச்சலே அணைக்காமல் அடிமனத்தில் விட்டு வைத்து, நம்மையே எரிக்க விட்டுவிடுகிருேம். இது நல்லதா? தன்னிலும் இனியார் தனக்கு யார் உளர்? தன்னைத் தான்காதலன் ஆயின் எனத்தொன்றுக் துன்னற்க தீவினைப் பால். என்று கல்லுரை பகருகிருர் திருவள்ளுவர். அறிவு தோய்ந்த தன்னலம். தன் வளர்ச்சியில் மூழ்கிவிடும்: பிறருக்குத் தீங்கு செய்யச் கருதவும் கருதாது. என் வாழ்வின் இனிமைக்கும் ஒளிமைக்கும் சாதனைக்கும் என்னுடைய அனைத்தையும் பயன் படுத்துவதே, ஒருமுகப் படுத்துவதே எனக்கு நல்லது. அது பக்கத்திற்கும் நல்லது. ஊருக்கும் நல்லது. காட்டுக்கும் நல்லது. மக்கள் இனத்திற்கும், அவர்கள் வாழ்விற்கும் நல்லது. வெட்டி விடுவோம். குழந்தைப் பருவத்துப் பழக்கத்தை வெட்டிவிடுவோம். பழிதீர்த்துக் கொள் வதில் வீணுகும் பழக்கத்தை வெட்டிவிடுவோம். + தெரிந்தோ, தெரியாமலோ, யாரோ நமக்குத் தீங்கு செய்துவிட்டால், அது சுருக்கென்று தைக்கும் உண்மை. காலிலே தைத்த முள்ளை அப்படியே விட்டு வைக்கிருேமோ? உடனே எடுத்து எறிந்துவிடுகிருேம். குத்தியபோதும் வலித்தது. முள்ளே எடுக்கும்போதும் வலிக்கும். எனினும், எடுத்து எறிந்துவிட்டே மறுவேலே பார்க்கிருேம். ஏன்? அதுவே வாழும் வழி.