பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109. பிறர் செய்த தீமை எவ்வளவு கொடுமையாகக் குத்திலுைம் அதை உள்ளத்திலே உறுத்திக் கொண் :டிருக்க விடக்கூடாது. முள்ளை எடுப்பதுபோல் அத் தீங்கையும் சட்டென்று எடுத்து எறிந்துவிட வேண்டும், அதாவது மறந்துவிட வேண்டும். கினேக்க நினைக்கவே, தீங்கு திங்கர்கத் தொல்லைப் படுத்தும். சதையிலே இருந்து எடுபட்ட முள்போல, நெஞ்சு மறந்துவிட்ட தீமை வலுவிழந்து மாய்ந்து போகும். எனவே, கன்றல்லது அன்றே மறப்பது கன்று ' என்று உலகப் பொதுமறை கூறுகிறது. அது பொய்யா மொழி. வாழ வழி காட்டும் ஆக்க நெறி. அதைச் சிக்கெனப் பிடித்துக்கொள்வோம். அவ் வழிமேல் விழி வைத்து மெல்லவாயினும் உறுதியாக கிதானமாக நடப்போம்.