பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கோட்ைசிக்கே பொருந்தும் என்பது சரியல்ல. இன்றை மக்களாட்சியில், ஆளும் பொறுப்பில் இருப்போர்க்கும் அவை இன்றியமையாதன. ஆளுவோர், கல்வி கேள்விகளால் அறிவு பெற்று, அதல்ை குற்றங்களே உணர்ந்து, கடிந்து, அதற்குத் துணையாகப் பெரியாரை ஏற்றுக்கொண்டு, அதற்குத் தீங்கான சிற்றினஞ்சேர்தலே பழைமை பற்றியும் தொடரவிடாமல் இருப்பது, ஆளும் வாய்ப்பின் தனிப் பொறுப்புகளாம். நாட்டையோ, வீட்டையோ, இரண்டிற்கும் இடைப்பட்ட அமைப்பையோ ஆளும் பொறுப்பி லுள்ளவர், ஆற்ற வேண்டிய வினைகள் பலப்பல. நினைத்தேன் முடித்தேன் என்னும் போக்கு சிறுசிறு செயல்பற்றிக்கூட, பலபோது, தனி வாழ்விலும் சரியல்ல. மக்களின் பொறுப்பை ஏற்றிருப்பவரோ, தனது செயலால், எண்ணற்ற மக்களது இன்ப துன்பங்களை உருவாக்கும் கிலேயில் இருப்பவர். அவர் ஆற்றும் பொதுப்பணிகளை, பொது முயற்சிகளை, நினைவில் தோன்றியதும் செயலில் படுத்துவது சரியல்ல. பின் என்ன செய்ய வேண்டும்? ஆர அமர, பலவற்றையும் எண்ணிப் பார்த்து, முடிவு செய்து, செயல்படவேண்டும். முன்னே தோன்றுவதை மட்டும் எண்ணிப் பார்ப்பதோடு கின்றுவிடக்கூடாது. பெரும் பொறுப்பை ஏற்றுள்ள வர்கள், பக்கத்தில் இருப்பவர்களைக் கொண்டே முடிவு செய்துவிடக்கூடாது.