பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 விதைக்காமல் முளேக்காது. விதை அழிய அழியல் முளை வளரும். உழைப்பு இல்லாமல் ஊதியம் இல்லை. அப்படி எவரும் பெற்ருல், அது களவு. உழைப்பு என்ருல் என்ன பொருள்? அதுவும் ஒருவகைச் செலவு: அழிவு. பெரிய செயலுக்கு பெரிய உழைப்புத் தேவை. அது பல்வகை உருவெடுக்கும். முதலில் சிங்தனையைச் செலவிட வேண்டும். . தொடங்க கினைக்கும் செயலுக்கு எவ்வளவு உழைப்புத் தேவை என்பதைத் தெளிந்த சிந்தனை காட்டும். . அவ்வளவு உழைப்பைச் செலவிட வேண்டும். உழைப்பை முதலீடு செய்வதுபோல், காலத்தையும் முதலீடு செய்ய வேண்டும். பயிரிட நினைக்கிருேம். வழி வழி பயிராகும் வயலே அது. அதில் கரும்பை நடுவதா? வாழையை நடுவதா? இது கேள்வி. வயலில் எத்தனே புள்களை நடவேண்டும். அத்தனே கிடைத்தால், அவற்றைப் பெற என்ன விலையாகும் வயலே, கரும்புக்கு ஏற்றதாக்க, எத்துணை உழைப்பு? அதைப் பெற எவ்வளவு முதலீடு கட்ட பிறகு, காவல் செலவு எவ்வளவு? எருச் செலவு : எவ்வளவு? காத்திருக்கும் காலம் எவ்வளவு? நீர் பாய்ச்சும் செலவு எவ்வளவு?