பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 போட்ட முதலுக்கு வட்டி எவ்வளவு? வெட்டுப் பருவத்தில் வெட்டுக்கூலி எவ்வளவு? பிறகு அரைவைக் கூலி எவ்வளவு? இவ்வளவையும் கூட்டினல், செலவுக் கணக்கு தெரியும். அதை அழிவது என்னலாம். விளந்த கரும்பை, அப்படியோ அல்லது சாறு .பிழிந்தோ விற்பதில் கிடைப்பதை ஆவது என்று கொள்ளலாம். முன்னர் செலவிட்டு, பின்னர் சம்பாதித்து, முடிவில் காண்பது ஊதியம். முந்தியதைவிட பிந்தியது, அதிகமாக இருக்க வேண்டும். கரும்பிலே அந்த எச்சம் சிறிதாகவும், வாழைப்பயிரிலே அது பெரிதாகவும் இருக்குமாயின், கரும்பிற்குப் பதில் வாழையைப் பயிரிட முடிவு செய்வது அறிவுடைமை. பொறுப்பிலுள்ளோர், மேற்கொள்ள வேண்டிய முயற்சி, இதுவா அதுவா என்று முடிவு செய்வதற்கு முன், இதற்காகும் செலவையும் அதற்காகும் செலவையும் மட்டும் கணக்கிட்டுப் பார்த்தால் போதாது. இதற்குச் செய்யும் செலவின் விளைவுஆக்கம்-எவ்வளவு ஆகும்? அதற்குச் செய்யும் செலவின் விளைவு-ஆக்கம் எவ்வளவு ஆகும்; இவற்றையும் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். அப்போது எதில் ஊதியம் அதிகம் என்பது தெரியும். அதோடு முடிந்ததா? இல்லை. மேலும் கவனிக்க வேண்டும். கரும்புக்கா, வாழைக்கா விலைக் கட்டுப்பாடு வரக்கூடுமென்பதும், எதை எளிதாக விற்க முடியு