பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 மென்பதும், எதில் அதிக களவு ஏற்படும் என்பதும் ஆய்ந்துப் பார்க்க வேண்டிய கூறுகளாகும். எதிரே வந்து நிற்கும் கூறுகளோடு, முந்திய போக்குகளால் தோன்றும் அனுமானங்களும் பிறவும் வளைத்து எண்ணிப் பார்த்து வினையை மேற்கொள்ளல் கடமை. இது, ஆளுவோருக்கு மட்டுமா கடமை நமக்குங்தான். இப் பொது நீதியையே வள்ளுவர், அழிவதுஉம் ஆவதுஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் என்னும் குறள் மூலம் புகட்டுகிருர். இது எக்காலத்துக்கும் எங்காட்டவர்க்கும் பொருங்தும் கடைமுறைச் செயல்வகை என்பதில் ஐயமில்லை.