பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் என்ற பொய்யா மொழியார், அகல மாகவும் ஆழமாகவும் வாழ்க்கையை ஆராய்ந்து, எல்லாக் காலத்துக்கும் பயன்படும்படியான கருத்து களை வழங்கியுள்ளார். அவர் வழங்கியுள்ள திருக்குறளில், பொருட். பாவில், தெரிந்து செயல்வகை என்ற அதிகாரத்தின் முதற் குறள் அமுதை முன்னர் உண்டோம். அதன் அடுத்த குறளை இப்போது பருகுவோம். இதோ: அக்குறள்: --- தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்று மில். ஆளும் பொறுப்புக்கு உயர்ந்தவர்களேச்சுற்றிப் பலரும்: கூடுவர். அவர்களில், சிரித்துப் பேசிவிட்டு, விரைந்து விடைகொடுத்து அனுப்பப்பட வேண்டியவர்கள் இருப்பார்கள். +