பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 நெருங்கிப் பழகித் தோழமை கொள்ளவேண்டிய வர்களும் இருப்பார்கள். - - - - - முந்தியவர்கள் பலர்; பிந்தியவர்கள் சிலரே ஆவர். * 豔 தோழமைக்குரிய சிலரை எப்படித் தேர்ங் தெடுப்பது? மெல்ல ஆய்ங்து, பல நிலைகளில் எடை போட்டே, தோழமைக்குரியவர்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தேர்ந்து எடுத்த பெரியார் சிலரிலும், அனைவருக்கும், அனைத்திற்கும் ஆலோசனை கூறும் ஆற்றலும் தகுதியும் இருக்க முடியாது. - -- சாதாரண மக்களாகிய கம்முடைய வாழ்க் கையிலே, நம் கல்வி பற்றி ஆலோசனை கூறும் தகுதியுடைய தோழர், கம் அலுவல் பற்றி வழிகாட்டக்கூடியவராக இருப்பதில்லை. அலுவல் பற்றி வழிகாட்டக்கூடிய வல்லுகர், செலவினம்பற்றி கல்வழி காட்டக்கூடியவராக எப்போதும் அமை வதில்லை. இவை மூன்றுக்கும் உதவும் தோழரே, சமய வழிகாட்டியாகவும் எல்லாப்போதும் உதவுவதில்லை. சாதாரண மனிதர்களுக்கே, ஒன்றுக்கு உதவு வோர், மற்ருென்றிற்கு உதவாமல் போய்விடுகிரு.ர். ஒருவரிடம் பரிந்துரைக்கப் பயன்படுவோர் வேருேரு வரிடம் தூதுசெல்லப் பயன்படாதவராகி விடுகிருர், எனவே, எதற்கு, யாருடைய ஆலோசனையை, ஆதரவை காடுவது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களோடு அதுபற்றிக் கலந்து ஆலோசிப்பதே பலன் உடையதாகும். 8