பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 ாைட்டம் உடையவராயினும், கூறும் ஆல்ோசனே o களிலே, வேறுபடக்கூடும். அங்கிலையில், அறிவுடைய ஆள்வோர் என் செய்ய வேண்டும்? 'வல்லுனர் என்றும் வழக்காடிக்கொண் டிருப்பர்’ என்பதல்ை, அவர்களே ஒதுக்கிவிடலாமா? அல்லது ஒத்தை இரட்டை பிடிப்பது போல, ஆனது ஆகட்டும், எப்படியும் முடியட்டும் என்று, தானே யாரையும் கேட்காமல் முயற்சிகளில் முனைங்து விடலாமா? ஆகாது. - எச் செயல்பற்றி முடிவு எடுக்க வேண்டுமோ அச் செயல் பற்றி, உரிய பெரியவர்களோடு கலங்து யோசிக்க வேண்டும். அதாவது தெரிந்த இனத்தோடு தேற வேண்டும். அவர்கள் ஆலோசனை ஒருமித்து இருப்பினும் சரி: வெவ்வேருக இருப்பினும் சரி; சட்டென்று முடிவு செய்யக்கூடாது. கேட்ட ஆலோசனைகளைத் தானே அமைதியாக இருந்து எண்ணிப்பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்க்கும்போது, ஆலோச கர்கள் கவனிக்கவிட்ட கூறுகள் தென்படலாம். அவற்றையும் காட்டி, அதற்கான அறிவுரைகளைப் பெற்று கடைசியில் முடிவுசெய்ய வேண்டும். ஆற்ற வேண்டிய செயலுக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய முயற்சியில் காலமும் இயல்பும் அருமையும் அமையும், தகுதியுடையவர்களோடு கலந்து பேசிப் பெற்ற கருத்துக்களை, தன்னுடைய எண்ணச் சல்லடையில் பொறுமையாகச் சலித்தபிறகு கிடைக்கும் முடிவிற் கேற்பச் செயல்பட வேண்டும்.