பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 இதல்ை தெரிந்து செயல் என்பதில் நான்கு கிலேகள் இருப்பது தெரியலாம். ஒன்று: முதலில் நமக்கு எந்த எந்தப் பொருள்கள் பற்றி எவர் எவர் கருத்துக்களை நாட வேண்டும் என்பதுபற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இரண்டு: அவ்வாறு தெரிந்து எடுக்கப்பட்ட வர்கள் உண்மையோடும் உள்ளன்போடும் கருத்துக் களைத் தேர்ந்து சொல்பவர்களாக இருக்க வேண்டும். மூன்று: அவ்வாறு கருத்துக்களைத் தெரிந்து சொல்கிறவர்களோடு கூடிக் கருத்துக்களை ஆராய, வேண்டும். == நான்கு: அவ்வாறு கூடி ஆராய்ந்த கருத்துக்களையும் தனித்தே இருந்த ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அப்படிச் செய்யக்கூடியவர், எடுத்த செயலை முடிப்பார். வெற்றிகரமாக முடிப்பார். அவருக்கு முடியாததொன்றும் இராது. இது அடிப்படை உண்மை அல்லவா? திருவள்ளுவர் காலத்திற்கு உண்மையாக இருந்து, விஞ்ஞானக் காலத்தில் உளுத்துப் போய்விட்ட கருத்து அல்லவே இது. நாடாளுவோர்க்குத் தேவை. யான இந்த அறவுரை உங்களுக்கும் எனக்கும்கூடத் தேவையே. எனவே மீ ண் டு ம் அக்குறளைப் படிப்போம். - தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்று மில்.