பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் பலவிதம். பலவித மக்களின் போக்கைக் கூர்ந்து கவனித்தார் வள்ளுவர். அதன் மூலம் உலகியலே உணர்ந்தார். உலகியலுக்கு அடிப் படையான பொது அறவுரைகளை மிகத் தெளிவாக வழங்கியுள்ளார். இதற்குச் சான்ருக, ஏற்கனவே, தெரிந்து செயல் வகை பற்றிய முதல் இாண்டு குறள் அமுதத் துளிகளைத் துய்த்தோம். இப்போது அவ்வதி காரத்தின் மூன்ரும் குறளைச் சுவைப்போம். ஆக்கங்கருதி முதல் இழக்கும் செய்வின ஊக்கார் அறிவுடை யார் என்கிருர் திருவள்ளுவர். இப்போது பழைய கதை ஒன்று நினைவிற்கு வருகின்றது. அக் கதை பழையது: ஆலுைம் அது காட்டும் கருத்து இன்றைக்கும் தேவையானது,