பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வாத்தொன்று பொன் முட்டை இட்டது. வாத்துக்காரனின் மகிழ்ச்சிக்கு எல்லையேது? சில நாட்கள் சென்றன. அவா, அவனைக் கவ்விற்று. மெல்ல மெல்ல நாளேக்கு ஒரு பொன்முட்டை பெறக் காத்திருப்பதற்குப் பதில், ஒரே ஈட்டில் பல முட்டைகளையும் பெற்றுவிட்டால், குபேரனகி விடலாமே என்று தோன்றியது. அவன், ஆக்கங் கருதியது இயற்கை. அது அவாவாக மாறியபோது தீங்காகி விட்டது. விரைவில் பெருஞ் செல்வகை வேண்டுமென்னும் அவா அறிவுக் கண்ணே மறைத்தது. - அவன் எதிர்பார்த்தபடி, முட்டைகள் பல குவிங் திருக்கவில்லை. ஏமாந்தான் வாத்துக்காரன். ஒவ்வொரு பொன் முட்டையாகப் பெற்று வளரப் பொறுமையில்லாததால், பொன் முட்டையிடும் வாத்தையே இழந்தான். ஆக்கங் கருதி முதல் இழங் தான். அவனே அறிவுடையவனென்று எவரே ஒப்புக் கொள்வர்? அது கதை. உண்மை வாழ்க்கையில், அத்தகைய அவா நிறைந்தோரைச் சிற்சில வேளைகளில் காண்கிருேம். * . . . பிற்காலத்திற்கு வேண்டும் என்று தற்காலத்தில் சிறுகச் சிறுகச் சேமிக்கும் வீட்டரசிகள் சிலரையாவது ஒவ்வொருவரும் அறிவோம். அவர்கள், சிறுகக் கட்டிப் பெருக வாழ்க என்னும் கல்வழியைப் பின்பற்றுவதைப் பற்றி மகிழ்வோம். |