பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 ஆக்கங் கருதும் அவர்களைத் திடீரென அவா ஆட்கொள்ளும். விரைவில் எதிர் வீட்டுக்காரியைப் போல் பணக்காரி ஆகிவிட வேண்டும் என்ற பேராசை பிடித்துக் கொள்ளும். தேன் சுரக்கப் பேசும் பக்கத்து வீட்டுக்காரியின் சொல்லே நம்பி, இரண்டாம் பேருக்குக் தெரியாமல், அதிக வட்டிக்கு அவளிடம் சேமிப்பைக் கொடுப்பாள். பக்கத்து வீட்டுக்காரியும், இரண்டாம் பேருக்குத் தெரியாமல், வேறு எட்டாத இடத்திற்குக் குடிபோய் விடுவாள். பணத்தாசை பிடித்தவள் பணத்தையும் இழந்து, வெளியில் சொல்லவும் முடியாமல் தவிப்பாள். ஆக்கங் கருதி, கைமுதலேயும் இழந்த தாய்மார்கள் பலரை என் இளமைப் பருவத்தில் அறிவேன். ஐயோ பாவம், எழுதப் படிக்கத் தெரியாத பேதைகள் என்று அப்போது இரங்கியதுண்டு. --- பிற்காலத்தில் கிறையப் படித்தவர்களையும் அவா கெடுக்கிறதைக் கண்டேன். என் பேராசிரியர் ஒருவர் - அப்பழுக்கில்லாதவர்தான்: நல்லவர்தான்; ஒய்வு பெற்றபோது கிடைத்த தொகையை வங்கியில் போட்டிருக்கலாம். "வங்கி வட்டி குறைவு; இதைவிட இருமடங்கு வட்டி கொடுக்கிருர், ஒர் பிரபல வணிகர்’ என்று கேள்விப்பட்டு, அவரிடம் பன்னிரண்டு வட்டிக்குக் கொடுத்தார்.