பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அவ்வணிகர், இப்படிப் பலரிடம் கடன் வாங்கி, கண்மண் தெரியாமல் செலவிட்டார். திடீரென ஒரு நாள் இன்சால்வன்சி கொடுத்துவிட்டார். பேராசிரியரும் மற்றும் பலரும் கை முதலை இழந்து தவித்தனர். பேராசிரியருக்குத் தன் பாடப் புலமை இருந்ததே தவிர, உலகியல் அறிவு இல்லை. . ஐங்தோ பத்தோ சேர்த்துச் சேர்த்து, எப்போது பணக்காரர் ஆவது என்று ஆத்திரப்பட்டு, கோட்டை இரட்டிப்பாக்கித் தருகிறேன்’ என்று ஏமாற்றுபவர் களிடம் சிக்கி, கையிருப்பையும் இழந்து புலம்பு வோரையும் காம் அறியாமல் இல்லை. அத்தகையோர் ஏமாளிகள்: அறிவுடையவர்கள் ஆகார். பண ஆக்கங் கருதி உள்ள முதலேயும் இழப் பதைப் போலவே, பிற முயற்சிகளிலும் ஆத்திரப் பட்டு உள்ள கிலேயையும் இழப்போர் உண்டு. உள்ளது சிறத்தல், இயல்பு உங்துதல், அதில் தவறு ஏதும் இல்லை. பேச்சாளர் ஒருவர், முன்னர் எப்படிப் பேசியிருந்தாலும், இனியாவது கேட்டார் பிணிக்கும் வகையில் பேச வேண்டுமென்று நினைப்பது தவறல்ல. மக்களைக் கவரவேண்டுமென்று கருதி, சிலவேளை, பெரிய கிலேயில் உள்ள பேச்சாளர்கள் கூட, தன் னிலேக்கு அடுக்காத கிண்டல்களிலும், குத்தல் களிலும் ஈடுபடுவதைக் கண்டிருப்பீர்கள். இரண்டொரு முறை மீண்டும் மீண்டும் அவர் அப்படிச் செய்தால், மக்கள் மதிப்பு குறைந்துவிடும்.