பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 அதேபோல், பிரபல எழுத்தாளராக வேண்டி, வேரன் முறையின்றி, கொச்சையாக எழுதி ஒதுக்கப் பேட்டவர்களும், எல்லாச் சமுதாயத்திலும் உண்டு. அத்தகையோரும் ஆக்கங் கருதி முதல் இழந்தவர் களே. இவர்கள் கிலே மற்றவர்க்குப் பாடம். எந்த அமைப்புகள் காட்டுடைமையானலும், குறிக்கோள் ஒன்றே. அது என்ன? கோடிக்கணக்கான சாதாரண மக்களுக்கு அவை நன்மைசெய்ய வேண்டும் என்பதே. பல கோடி குடிமக்களுக்குப் பயன்படவேண்டிய அங்த அமைப்புகளே, அவற்றிலுள்ள சில ஆயிரம் மக்களே தங்கள் கட்டுப்பாட்டால், மிரட்டலால், வன்முறைகளால், தங்கள் சொந்த கலனுக்கு அதிக மாகப் பங்கிட்டுக் கொள்வது, முடிவில் அவர்களுக்கே .தீமையாக முடியும். பொது மக்கள் நெடுங்காலம் ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள். தங்களுக்குப் பயன்பட வேண்டிய நிறுவனங்கள், சிறு கூட்டத்தின் அதிகப் படியான வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுவதைக் கோடிக்கணக்கான பொதுமக்கள், உணரத் தலைப் பட்டால், விளையக்கூடிய விபரீதங்களை எண்ணவே முடியாது. எனவே, தனி நபராக, ஆக்கங் கருதி, முதல் இமுத்தல் எவ்வளவு அ றியாமையோ அவ்வளவு பெரிய அறியாமையே, தொழிற்கூடங்கள், ஆக்கங் கருதி முதல் இழக்கும் நெருக்கடியை உருவாக்குதல்.