பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வாழையடி வாழையாக உயர்ந்த அறிஞர்களையும், சிறந்த சாதனையாளர்களையும் பெற்று வந்த ஜெர்மனி, உலகைக் கட்டியாளும் பேரவாவிற்கு அடிமையாகி அகலக் கால்வைத்துத் தோற்று, முன்னர் இருந்த கிலப்பரப்பில் ஒரு பகுதியை இழந்து கிற்கிறது. இது, ஆக்கங்கருதி முதல் இழந்ததற்கு மற்ருேர் எடுத்துக் காட்டு. - முற்காலத்திலும் இக்காலத்திலும் தனிநபர்க்கும் பெரும் நிறுவனங்களுக்கும் காட்டைக் கட்டி ஆள்வோர்க்கும் பொருந்தும் அடிப்படை அறிவைப் புகட்டும் குறளே மீண்டும் கினைவு படுத்திக் கொள்வோம்: ஆக்கங் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார்.