பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தன் அறிவு முழுவதும் வளர்ந்து, தன்ற்ைறல் அனைத்தும் பயன்பட்டு, தன்னுணர்வு முழுமையும் அபண்பட்டு, வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டும் நூல், திருக்குறள். மனிதன், வளர வேண்டிய தனி ஆள்: சீர்மை பெற வேண்டிய தனி ஆள். அது மட்டுமா? பரந்த சமுதாயத்தின் உறுப்பினன். சமுதாயத் தில் வாழவேண்டிய ஒராள். சமுதாயத்தோடு ஒன்றி இணைந்து வாழவேண்டிய ஆளுமாவான். சமுதாயத்திற்காக வாழ வேண்டியவனுமாவான், மனிதன். திருக்குறள் அறத்துப்பால், பெரும்பாலும் தனி மனித வளர்ச்சிக்கும், உயர்விற்குமான நெறிகளைக் காட்டுவதாகக் கொள்ளலாம். பொருட்பாலோ, நம்முடைய சமுதாயப் பொறுப்புகளையும் கடமைகளையும் மையமாக்கி வழி காட்டுகிறது. - மேலெழுந்த வாரியாகப் பார்க்கின், பிறப்பால் மன்னரானவருக்கு மட்டுமே பொருட்பால் நெறிகள் பொருத்தமென்று தோன்றும். அப்படிக் கருத வேண்டாம்; ஆழ்ந்து சிந்திப்போருக்கு முழு உண்மையும் விளங்கும். - தேர்வால், ஆளும் உரிமையைப் பெறும் தலைவர் -களுக்கும், ஏனையோருக்கும் தேவையான பொருத்த o ==