பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வெறும் மக்கட்பேரு? இல்லை. அறிவு அறிந்த மக்கட் பேறு. காரணம்? அறிவுடைய மக்களைப் பெற்றுவிட்டால், மற்றவை தாமே வந்து சேரும். மக்களுக்கு அறிவு, காலத்திற்கேற்ற அறிவு, கல்லேறிவு இல்லாவிடில், சேர்த்துவைத்த அத்தனையும் அழிந்து விடும். இதோ வள்ளுவர் வாய்மொழி: பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற." இவ்வறிவுரை தனி மனிதர்தளுக்கோ - குடும்பங் களுக்கோ மட்டும் உரைக்கப்பட்டதல்ல. காடு களுக்கும் உரைக்கப்பட்டதாகும். தனி நபரோ, ஒரு நாடோ, வாயை வயிற்றைக் கட்டிச் சேர்க்கும் செல்வமாயினும், அங்கும் இங்கும் புரட்டிப் பெறும் செல்வமாயினும், அடித்துப் பிடித்துப் பெறும் செல்வமாயினும், அத்தனையும் யாருக்காக? மனிதனுக்காக மனித குலத்திற்காக. துய்ப்பவனே மறங்துவிட்டு, துய்ப்பனவற்றைப் பெற முயல்வது முறைகேடு. மனிதனுக்காகப் பொருள்கள் ஆக்கப்படுகின்றன. செல்வம் சேர்க்கப்படுகின்றன. பொருட் செல்வத் தைப் பெருக்குவதைவிட மனித வளத்தைப் பெற. முயல்வதே தலையாய கடமை. யுன்ருே மனிதனே பிற உயிர்களில் இருந்தும் பிரித்து, உயர்த்தி, கிறுத்துகிறது.