பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129. மான வழிமுறைகளைக் கொண்டு விளங்குவது. பொருட்பாலாகும். நாம், துரய வினையொன்றை மேற்கொள்ள எண்ணித் துணிகிருேம். தன்வலியும், மேற்கொள்ளப் போகும் வினவலியும் எடைபோட்டுப் பார்த்தே அம் முடிவிற்கு வருகிருேம். தக்காரோடு சூழ்ந்து எண்ணி, காலமறிந்து, இடமறிந்து, தொடங்குகிருேம், அம்முயற்சியை. இவ்வளவோடு முடிகிறதா அச் செயல்? பொத்தானை அழுத்தியதும் எரியும் விளக் கென, அம் முயற்சி வென்றுவிடுமா? வெல்லாது. கான், காலே எழுங்த உடன் தோட்டத்தைப்" பார்க்கிறேன். அதோ குழி. அதிலே காலேங்து பச்சைப் பசேலென கண்ணைக் கவர்கின்றன. அவை என்ன? முளைத்த செடிகள். இரண்டிலேயோடு முளைத்த அவற்றில் எதுவும் வாடியில்லே. அத்தனையும் வெற்றிச் சிரிப்போடு காட்சியளிக்கின்றன. மூன்று நாளைக்கு முன் நான் செய்தது நினைவில் மின்னுகிறது. என்ன செய்தேன்? தோட்டத்துக் குழியில் பத்து விதைகளை ஊன்றினேன். வெளியே தெரியும்படி விட்டுவிட்டேன? வானத்தைப் பார்க்க விட்டேன? இல்லை. ஊன்றிய விதை ஒவ்வொன்றின் மீதும், மெல்ல, சிறிதளவு மண்ணேத் தள்ளினேன். ஏன்? மண்ணில் மறைங்த விதையே முளைக்கும். . திறந்து கிடங்தால் முளைக்காது. === கட்ட விதையிலே உயிர்ப்பு இருந்தால், இட்ட மண் இடுக்கண் ஆவதில்லை. விதை, அதையும் தள்ளி'