பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 விட்டு, வெளியே தலைகாட்டிப் புன்னகை வழங்கும். மாருக, விதைக்குப் போதிய வீரியம் இல்லாவிடில், இட்ட மண்ணே இடுக்கனகி, போட்ட விதை முளைக் காது, புதைங்தே ேப ா ய் வி டு ம். எவ்வளவு மண்மூடியைத் தாங்கி, வெடித்து வளரும் என்பது, விதையின் தன்மையைப் பொருத்தது. * அதைப்போல் செய்ய வேண்டிய நன்முயற்சியில் ஒருவர் ஈடுபடும்போது இடையூறு ஏற்படுவது இயற்கை. அத்தகைய இடர்ப்பாடு எதிர்ப்படும் போது, ஆண்மையாளன் மனங்தளரலாமா? ஆகாது. கல்லதைச் செய்யும்போது, அல்லல் வங்து அலேக்கழிக்கிறதே என்று சலித்துக் கொள்ளலாமா? கிடடTது. சோர்ந்து, எடுத்த பணியை விட்டு விடலாமா? விடக்கூடாது. விதையின் மேல் படர்ந்திருக்கும் சிறு மண், விதை முளைக்க உதவுவது போல், கன்முயற்சியில் .ஈடுபடுவோர்க்கு வழிமறிக்கும் இடர்ப்பாடுகளும் உதவும். எப்போது? வழியே வரும் இடையூறுகளைக் கண்டு அஞ்சாமல், கோகாமல், அதை வென்று வெற்றிச்சிரிப்புச் சிரிக்கும் மனப்பாங்கு உள்ளபோது. கம் ஆண்மைக்கு செயல் திறனுக்கு, அறைகூவல் விடவே, எதிரே வருகிறது, இடர்ப்பாடு. அதைக் கண்டு அஞ்சி கின்ருல், அது கம்மை வெல்லும். எனவே அஞ்சுதல் ஆகாது. "ல்" =