பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 துன்பத்தைத் தள்ளிவிட்டு முன்னேற வேண்டும். தன்னம்பிக்கையில், இறுதி வெற்றி உறுதி என்கிற கம்பிக்கையில் பொங்கிவரும் நகைப்பே, அந்த இடர்ப் பாட்டை வெல்வதற்கு ஏற்ற உபாயம். அதற்கு ஈடான மற்ருேர் உபாயமில்லை. " இது இக்கால உளவியலார் எடுத்துரைக்கும் வெற்றி வழியாம். இதையே ஈராயிரம் ஆண்டுகளு க்கு முன்னல் கம்மவர் - திருவள்ளுவர்-சுருங்கச்சொல்லித் தெளிவாக விளங்க வைத்துவிட்டார். எனவே, இடுக்கண் வருங்கால் நகுக, அதனை அடுத்துார்வது அ.தொப்ப தில். என்னும் குறளமுதை அள்ளிப் பருகுவோம். ஆண்மை பெறுவோம். என்றும் எப்போதும் வெல் வோம். جیتے۔