பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். சமுதாயத்தில் ஒருவகிைய மனிதன், சார்ங் தோர்க்குச் சுமையாக இருக்கலாமா? ஆகாது. எனவே, தானே பாடுபட்டுப் பொருள் தேட வேண்டும். அதோடு சமுதாயத்திற்குப் பயனுள்ள செயற்கரிய தொண்டொன்றினையும் மேற்கொள்ள வேண்டும். + திர ஆராய்ந்து, தெளிந்து, திட்டமிட்டு, சோம்பலேக் களைந்து, முயற்சி செய்யும்போது, முயற்சிக்குத் தடைகள் பல எதிர்ப்படக்கூடும். தடைகள், பன்னிர் தெளிப்புப்போல் சிறியன வாக இருக்கலாம்; இவற்றை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். # வறட்சிக் காலக் குழாய்நீர்போல் சொட்டலாம். இவற்றையும் ஒதுக்கிவிடுவார்கள் பலர். பெரும் மழையாகப் பெய்யலாம். அப்போது எங்காவது ஒதுங்கிக்கொள்வோர் எண்ணற்றவர். அதற்கும் மேலாக, வெள்ளப் பெருக்காக ஒடலாம். அத்தகைய இடையூறுகளைக் கண்டு மனங் கலங்கி, செயலற்றுப் போகலாமா? ஆகாது. பின் என்ன செய்ய வேண்டும்: இடையூறுகளை நொறுக்கித் தவிடுபொடியாக்கி விட வேண்டும்.