பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அப்படித் துள்ளாக்க வழியுண்டா? உண்டு. அது எவ்வழி: உள்ளத்தின் உரமே அவ்வழி. அந்த உள்ள உரமும் அறிவோடு இணங்து இயங்கும் போதே, வெற்றி பெறும். அறிவில்லாத சாதாரண மனிதன் தடைகளைக் கண்டு நடுங்குவான்; சோர்ந்து விடுவான்; மேற் கொண்ட கல்முயற்சியைப் பாதியில் கைகழுவ விட்டு விடுவான். அறிவுடைய மனிதனே, உறுதியான உள்ளத்தில் தடைகளைத் தள்ளுவான். ஒவ்வொரு தடையும் அறிவுப் பொறியால் நொறுக்கப்படும். அத்தனையும் கொறுக்கப்படும் வரை உறுதியுடைய அவ்வுள்ளம், கடைசியில் மகத்தான வெற்றி வாகை குடும். வரும் தீங்குகள் ஒன்றிரண்டாயின் தாங்கலாம். வெள்ளம் போல் வருபவற்றை மெய்யாகவே கடக்க இயலுமா? இப்படிக் கேட்கத் தோன்றுகிறதா? நல்லது. அதையும் சிங்திப்போம். நாம் பெற்றிருப்பதோ என் சாண் உடம்பு, அதற்குள் பதுங்கியிருக்கும் குடலோ சிறியது. ஒரு நேரத்தில் அக்குடல் ஏற்கக்கூடிய உணவோ, நாழி? ஆல்ை ஒரு முதியவர், மொத்தம் உண்டது எத்தனை நாழி? --- அறுபது ஆண்டுகள் உடல் கலத்தோடு வாழ்ந்த வன் உண்டு செரித்த உணவுப் பொருள்கள், சில கூடைகள் மட்டுமா? இரண்டொரு வண்டியளவா?