பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 தனித்தனியே குவித்தாலும், நான் உண்ட சில பொருட்கள், குன்றெனக் குவியுமே! கோடென உயருமே! குடித்த நீரும் ஊருணியெனப் பெருகுமே! இவ்வளவையும் ஒவ்வொன்ருக, வேளைக்கு வேளை, சிறு அளவினதாகத் தொடர்ந்து உண்டதால், மலேயென உண்டு செரிக்க முடிந்தது. வாழ்க்கையில் எதிர்ப்படும் தடைகளும், ஒரே நேரத்தில் மொத்தமாகச் செரிக்கப்பட வேண்டியவை அல்ல; மாருக, ஒவ்வொன்ருக, மெதுவாக, விழுங்கப் ԼIւ- வேண்டியன. a. இதை அறிவுடையான் அறிவான். அறிவிலாதவனுடைய உள்ளத்திற்குத் தடைகள் அனைத்தும் ஒன்ருகி வெள்ளமெனத் தோன்றும் . அத்தகையவர் இடையூறு வெள்ளத்தைக் கண்டு. அஞ்சி, கால்வைக்கவும் துணியாது, கரையிலே கின்று விடுவர். ஆற்று வெள்ளத்தில் அடியெடுத்து வைக்க அஞ்சுவோர் பலராவர். ஆயினும், இங்கும் அங்கும் இரண்டொருவர் வெள்ளத்திற்கு அஞ்சாமல், அதைக் கடந்து, அடுத்த கரைக்குப் போய்ச் சேருவர். அவர்களுக்கு உடல் திண்மையும் உள்ள உரமும் அடிப்படை. நீச்சல் நுட்பமும் திறனும் வெற்றிக்கு இயக்கும் ஆற்றல்கள். உறுதியும் நுட்பமும் சேர்ந்து SSTT YccSTSTS TTTTT TAAASAASAASAASAAAS த