பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஆற்று வெள்ளத்தைக் கடக்கும்போது, அதைத் தடுத்து நிறுத்த முயல்வோர் உண்டா? இல்லை. அதைத் தடுத்து நிறுத்தும் வீண் முயற்சியில் ஈடுபடாமல், தன் வலிமையை கம்பி, தன் நுட்பத் திறனை நம்பி, போக்கறிந்து நீங்துவதால், நீங்துவோர் கரை சேர்கிரு.ர். -- வெள்ளத்தை ஒடவிட்டு, அதன்மேல் நீங்திக் கரை சேர்வதைப் போல், தொடர்ந்து வரும் பெருங் தடைகளை ஒடவிட்டு, அவற்றின்மேல் ந்ேதிச்சென்று. எடுத்த செயலே முடிப்பார் உள்ள உறுதியும் அறிவு: நுட்பமும் உடையவர். அத்தகையோராக அனைவரும் மாற வேண்டும்;. வெற்றி பெற வேண்டும். அதை நினைவுபடுத்த, வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் என்னும் குறளமுதம் எதிரே வருகிறது. அதை. ஒடிப்போகும்படி விட்டுவிடாமல், அள்ளிப் பருகி, வெற்றி வாழ்வு வாழ்வோமாக.