பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 'எனவே, கவிஞர்கள், உலக மக்களுக்கெல்லாம் வாழ்க்கை நெறிமுறைகளை இயற்றித் தருபவர்கள் ஆவார்கள். அத்தகைய கவிஞர்களுள் முன்னணியில் நிற்பவர் கம் திருவள்ளுவர். அவர் தந்த திருக்குறள், யாருக்கு உரியது? எல்லோர்க்கும் உரியது. காட்டையும் மக்களையும் கட்டிக் காத்து ஆண்ட, அக்காலப் பிறவி மன்னர்களுக்கு மட்டும் பொருங்து வதா, திருக்குறள்? இல்லை. மக்களின் முடிவுப்படி, ஆளும் பொறுப்பினே ஏற்கும் இக்காலத் தலைவர் களுக்கும் பொருங்தும். ஆட்சித் தலைவர்கள் நல்லவர்களாக இருத்தல் மட்டும் போதாது; அவர்களால் நடத்தப்படும் மக்கட் சமுதாயமும் நல்லதாக இருக்க வேண்டும். - தனி மனிதர்கள் கூட்டங்தானே சமுதாயம். தனி மனிதர்கள் அறிவறிந்தவர்களாக, அல்லதை நீக்கி கல்லதைச் செய்பவர்களாக, கடல் கலங்கிலுைம் தாம் கலங்காச் சான்ருேர்களாக வாழ்ந்தால், சமுதாயம் நல்லதாக விளங்கும். o தனி மனிதன் கல்விகேள்விகளால் அறிவு பெற்று, தெளிவுகொண்டு, உறுதிபூண்டு, சால்புடை யோனக வாழ்வதற்கு என்ன தேவை? வழிகாட்டும் சான்ருேர் தேவை. தொலைவில் வீற்றிருக்கும் அரசர்களோ ஆட்சித் தலைவர்களோ மட்டும் சான்ருேர்களாய் இருத்தல் போதாது.