பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 - எனவே, பிள்ளையைப் பெற்ருல் மட்டும் போதாது. அறிவறிந்த மக்களாகவும் பெறவேண்டும். அது நம் கையிலா இருக்கிறது? ஆம். வேண்டும். என்ன செய்ய? சுரையை 5ட תתaהש வேண்டும். புடலை வேண்டுமா? புடலையை கட வேண்டும். என்த விதைக்கிருேமோ, அதைப் பெறு வோம். தெளிப்பதைத் தெளிக்கவேண்டும். கடுவதை கடவேண்டும். கண்டபோது விதைத்தால் விளேயுமா? கண்ட இடத்தில் விதைத்தால் விளையுமா? விளைதல் அரிது. விளையினும் பலன் சிறிது. உரிய கால்த்தில் விதைத்தல் வேண்டும். பக்குவப் படுத்தப்பட்ட இடத்தில் விதைக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு முன் விதைத்திருக்க வேண்டிய விதையை இவ்வாண்டு விதைத்தால் எப்படியிருக்கும்? முளைத்தால், இங்கொன்றும் அங்கொன்றுமே வளரும். விளைச்சலை வேண்டிய அளவு எதிர்பார்க்கக் கூடாது. நல்ல நிலையிலுள்ள விதையை, உரிய பருவத்தில், தக்க இடத்தில் கட்டு, வளர்த்து, காத்து, ர்ே பாய்ச்சி, உரமிட்டு வந்தால் பலன் கிடைக்கும். உழைப்பிற்கும் உரத்திற்கும் ஏற்ற பலன் கிடைக்கும். பட்ட பாட்டுக்கு ஏற்ப பலன்: பாதுகாப்பிற்குத் தக்க பலன். முயற்சியின் அளவு விளைவு. பயிரின் பலன் வினையோடு இணைந்தது; பயிரிடும் போது ஏற்ற உழைப்பை ஒத்தது. மக்கட் பயிரின் பலனும் வினைக்கு ஏற்ரும்போல், எப்போதோ செய்த வினைக்கேற்ருற் போலல்ல. மக்களை வளர்க்கும் போது, ஏற்கிற முயற்சியைப் பொறுத்தது. வளரும்