பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 மக்களுக்கு அண்மையில் இருந்து, அடிக்கடி, சான்ருண்மைக் கதிர் வீசும் கல்லோர்கள் தேவை. அத்தகைய கல்லோர், அறிஞர்களாக, அன்பர் களாக, அறவாழிகளாக, ஒழுக்க சிலர்களாக, எல்லா கிலேயிலும் உயர்ந்த குறிக்கோளுக்காக வாழ்பவர் களாக, விளங்குவார்கள். அவர்களே எப்படி அடையாளம் காண்பது: இக்கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன், சிறிது, வேறுபக்கம் பார்ப்போம். அதோ, வெவ்வேறு வகையான மாம்பழக் குவியல்கள். அவற்றில் எங்த வகை மாம்பழம் சிறந்தது? மணம் வீசும் இரண்டொரு மாம்பழ வகையைக் கையிலெடுத்துப் பார்ப்போம். அதோடு கிற்குமா கம்முடைய சோதனை? நில்லாது. அறுத்துச் சுவைத்துப் பார்ப்போம். சுவைமிக்க மாம்பழத்தைச் சிறந்ததாகக் கொள்வோம். சுவை மிகுந்த இடத்தும், கார் பற்றில்ை, மட்டமெனக் கருதி ஒதுக்குவோம். இப்போது மக்களின் வழிகாட்டிகளைக் கவனிப் போம். அவர்களில் பலர் மணம் பரப்பிக் கொண்டி ருப்பார்கள். அவர்கள் கல்லதை நினைப்பர்; கல்லதை உரைப்பர்; கல்லதைச் செய்வர். o தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மட்டும் கல்லதை கினேங்து, கல்லதைச் செய்பவர்கள், மன்ப தைக்கு வழிகாட்டிகளாக மாட்டார்கள்.