பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று எண்ணி, சொல்லி, செய்து, வாழும் அறவோரே, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்; வழி காட்டிகளாக விளங்கும் சான்ருேர். சான்ருேர், பிறர் இன்னலைப் போக்குவதிலேயே இன்பம் காண்பர். செல்வத்தின் பயன் ஈதலே’ என்று தெளிந்த பண்பாளர்கள், அத்தகையோர். எனவே, பொருள் வளம் குறைந்தாலும் கொடை வளம் குறையார். தேய்ந்தாலும் மணம் கொடுக்கும் சந்தனக் கட்டை போன்ற சான்ருேரை அடையாளம் தெரி கிறது. மற்றவர்கள் கண்டு அறிந்து பின்பற்ற வேண்டிய கிலேயில் வாழும் தலையாய மக்கள் எவ்வளவு தேவையானவர்கள் என்பதை உணர்த்த, அத்தகையோரின் இயல்புகளைத் தொகுத்துச் சொல்ல, 'குடிமை என்னும் முழு அதிகாரத்தை ஒதுக்கியுள்ளார் வளளுவா. அவர்களே எங்கே காண முடியும்? தொன்றுதொட்டு வரும் கல்ல குடியிற் பிறந்த வர்களிடையே அத்தகைய தலையாய மனிதர்களைக் காணமுடியும் என்கிருர் வள்ளுவர். ஒன்றும் விளையாத பாலையும் உண்டு; மிக நெல் விளே கன்னிலமும் உண்டு. பிங்தியது இயற்கையா? செயற்கையா? இரண்டும். மண்வளம் மட்டுமல்ல. கன்னிலத்தை நமக்குத் தங்தது.