பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ஒழுக்கத்தை உடைக்கும், பண்பைப் பாழாக்கும் தீய கச்சுக் காற்றுகள், அதிகம் நெருங்க வாய்ப் பில்லாத காலம், முற்காலம். எனவே, கற்குடிப்பிறப்பால் இயற்கையாகப் பெற்ற பண்பினே, மூத்தோர் நெறிப்படுத்தி வளர்க்க, அது பழுதுபடாது தழைத்தது. - அத்தகைய பழங்குடியில், கற்குடியில் பிறந்து வளர்ந்த நன்மகன், தன் பண்பாட்டிலிருந்து வழுவா மல், ஒப்புரவு செய்தலைத் தவிர்க்காமல், பொருள் குறைந்த போதும் அருளும் பண்பை விடாமல், வாழ் வாங்கு வாழ்வதைக் கண்டார் வள்ளுவர். அங்தச் சான்ருேர் வெறும் தனி மனிதரல்லர். உலகிற்கு ஒளி வழங்கும் உத்தமர். அவரைப் படம் பிடித்துக் காட்டும் திருக்குறள் இதோ:

  • வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று." நெஞ்சில் கொள்க, இவ்வோவியத்தை.