பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் அளவிற் சிறியது: ஆழத்தில் பெரியது. சின்னஞ்சிறு பாக்களால், பெரும் பெரும் நெறிகளைக் காட்டுவது. எல்லார்க்கும் தேவையான நெறிமுறைகளைக் காட்டுவது. அரசன்முதல் குடிமகன்வரை ஒவ்வொருவரும் துாய வாழ்க்கை வாழவேண்டும். அக்குறிக்கோளே. அடைய, கொள்ளத்தக்கன எவை என்று எடுத்துக் காட்டுகிறது. தள்ளத்தக்கவற்றையும் கோடிட்டுக் காட்டுகிறது. தனிமனிதத் தூய்மைக்கும் உயர்வுக்கும் தடம் காட்டும் குறள், குடும்ப கலத்திற்கும் நெறி காட்டு கிறது. சமுதாயச் சீர்மைக்கும் வழி சொல்லுகிறது. == இன்பத் துப்பாலுக்கு ஒதுக்கிய அதிகாரங்களை விட, அறத்துப்பாலுக்கு எடுத்துக் கொண்ட அதிகாரங்களைவிட, பொருட்பாலுக்கு அதிகப்படியான அதிகாரங்களே கொடுத்துள்ளது, ஆழ்ந்து சிந்திப்ப தற்கு உரிய ஒன்ருகும்.