பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 H தி ரு வ ள் ளு வ ர் கண்னேட்டத்தில், தனி மனிதனுக்கு உள்ள சமுதாயப் பொறுப்புகளும் கடமைகளும் அதிகக் கவனத்துக்கு உரியன. எனவே பொருட்பாலில், அரசியல், அதன் அங்க இயல் பற்றிப் பாடினதோடு கிற்காமல், குடி இயலும் கவனிக்கத்தக்கது என்று சுட்டிக் காட்ட, அதற்குத் தனியொரு அதிகாரம் வகுத் துள்ளார். மனித இனம் உருவாகி எத்துனே ஆண்டுகள் ஆயின என்று, இன்றும் அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. ஆயினும், மனிதன் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்டன என்பதில் யாருக்கும் ஐயமில்லை. மனிதன் சீரிய சீலங்களின் உருவாகத் தோன்ற வில்லை. கொடிய விலங்கியல்புகளே செறிந்தவகை -வும் தோன்றவில்லை. இரண்டும் கலங்த ஒரு உயிராகவே தோன்றின்ை. கல்லியல்புகளும் தீய இயல்புகளும் எல்லார்க்கும் ஒரே அளவில் கலங்துள்ளதா? இல்லை. ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு விழுக்காட்டில் கலந்துள்ளது. பலருக்குத் தீய இயல்புகள் நிறையவும் கல் :லியல்புகள் சிறியதாகவும் சேர்ந்திருக்கலாம். அத்தகை யோர், தாம், தம் மக்கள் என்ற எல்லேக்கோடுகளை வகுத்துக்கொள்வார்கள்.தாமும் தம் உற்ருரும் மட்டும் வாழ்ந்தால் போதுமென்று கினைப்பார்கள். அவர்கள் சொல்லும் செயலும் அதற்குள்ளேயே சுழலும்.