பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 காடு என்ற ஒன்று இருக்கிறது. அதில் எண்ணற்றமக்களும் இருக்கிருர்கள். அவர்களும் வாழவேண்டு. மென்ற சிங்தனே அவர்களுக்கு எழாது. எனவே, பிறரை வாழ வைக்கும் பொருட்டு அவர்கள் எதையும் சொல்லார்; செய்யார். மாருக, தங்கள் குறுகிய கலன்களே வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, பழி பாவங்களுக்கு அஞ்சாமல், பொய் பேசி, குதுவாது செய்து கொண்டிருப்பர். அவர்களுடைய வாழ்க்கைக் குறிக்கோள் எவ்' வளவு குறுகியதாக உள்ளதோ, அவ்வளவு சூதும் வாதும் கொடுமையும் வஞ்சனேயும் நிறைந்ததாக இருக்கும், அவர்களுடைய சொல்லும் செயலும். சார்பு இல்லாத அத்தகையோர், சமுதாயத்திற்கு. எடுத்துக்காட்டுகளாக ஆவார்களா? ஆகார்; சமுதா யத்தை எச்சரிக்கும் சிவப்பு விளக்காவார். இதற்கு மாருக, ஒரு சிலர், வழிகாட்டும் சான்ருேராக விளங்குவர். அவர்களுடைய வாழ்க்கை, உயிரோடு இருந்து, உண்டு, உடுத்தி, பெருக்கிப் போவ : தல்ல. அவர்களுடைய வாழ்க்கைக்கு உயர்ந்த குறிக் கோள் இருக்கும். ‘வையம் வாழ்க’ என்னும் சீரிய குறிக்கோளை உடைய சான்ருேர், எங்கிலேயிலும், எதன் பொருட்டும். தீயன செய்ய மாட்டார்கள்; பிறரை ஏய்த்து, தாம் உயர முனையார்.