பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ° பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லே *யென்பதை உணர்ந்தாலும், அறவழியாலன்றிப் .பிறவழியால் ஒருபோதும் பொருள் தேடார். அப்படி அறவழி பெற்ற பொருளையும் பலரோடும் பகுத்துண்டு மகிழ்வார்கள்; தனியே மறைத்து வைத்து நுகர முனைய மாட்டார்கள். சால்புடையவர்கள் மானத்தைப் பெரிதாகப் பேணுவரேயன்றி, மானத்தை விட்டுக் கொடுத்து, எப் பயனையும் காடமாட்டார்கள். தனக்கு இன்னல் வின்வித்தவருக்கும் நன்மையே செய்பவர், சான்ருேர். பழி வாங்குவதோ, வஞ்சிப் பதோ, அத்தகையோர் இயல்புக்கு அப்பாற்பட்டது. இப்படி மாசற்ற வாழ்வை மேற்கொண்டு ஒழுகும் சான்ருேர், உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழும் கல்லோர், வாழையடி வந்த பழங்குடியில் இருப்பதைக் கண்டார் வள்ளுவர். எண்ணற்ற ஆண்டுகள் உழுது உழுது பண்படுத்தப்பட்ட நிலம் கன்னிலமாகி விடுகிறது. அங்கிலத்திலும் காலம் காலமாகத் தொடர்ந்து பயிராகும் சில பயிர்கள் செழுமையான பயிர்களாக இருக்கும். இவ்வியற்கை கமக்குக் கற்பிக்கும் பாடம் .என்ன? - இயற்கை வளத்தோடு செயற்கை உழைப்பும் சேரும்போது, மண்வளம் பெருகும். தொடர்ந்து .ஒன்றையே பயிரிட்டு, உள்ளது சிறக்கவைக்கும் போது, செழும் பயிரும் உருவாகின்றது.